பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விசாரணையின்றி சிறை

பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களி்ல ஈடுபடும் நபர்களை விசாரணையின்றி சிறையில் அடைக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் கடந்த வாரம் நடந்த, மாற்று பாலினத்தவர்களுக்கான பேரணியின்போது தாக்கப்பட்ட 16 வயது நிரம்பிய இளம்பெண் ஷிரா பான்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சூழ்நிலையில், கடுமையான சட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஷிரா பான்கி உயிரிழக்கக் காரணமான தாக்குதல் மற்றும் மேற்கு கரைப் பகுதியில் 18 வயது பெண் உயிரிழக்கக்காரணமான தாக்குதல் என்று பாலஸ்தீனர்களுக்கெதிரான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக செயல்படுவோரை விசாரணையின்றி சிறையில் அடைக்கும்பட்சத்தில், அப்பாவி யூதர்கள் பலர் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply