ரக்பி வீரர் தாஜ_டீனின் சடலத்தை தோண்ட அனுமதி கோரும் சீ.ஐ.டி

படுகொலை செய்யப்பட்ட தாக சந்தேகிக்கப்படும் இல ங்கை ரக்பி அணியின் முன்னாள் வீரர் வசீம் தாஜூடீனின் சட லத்தை தோண்டியெடுத்து சோத னைக்கு உட்படுத்த குற்றப் புல னாய்வுப் பிரிவினர், சட்டமா அதிபரின் அனுமதியை நாடியுள் ளனர். ஹவ்லொக் ரக்பி அணியின் முன் னாள் தலைவர் தாஜூடீனின் மரணம் விபத்து அல்ல. அது ஒரு கொலை என்பதற்கான புதிய ஆதாரங்கள் அண்மைய விசாரணைகளில் தெரிய வந்தி ருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறி வித்திருந்தனர். இந்த நிலையில் தாஜூடீ னின் சடலத்தை தோண்டியெ டுத்து சோதனைக்கு உட்படுத்து வதற்கு சட்டமா அதிபர் சாதக மான பதிலை வழங்கினால் நீதிமன்றத்தின் ஊடாக அதற்கு அனுமதியைப் பெற முடியும் என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

தாஜூடீனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பகுதிக்கு ஏற்கனவே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாஜூடீனின் சடலத்தில் கூரிய மற்றும் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட தற்கான தடயங்கள் காணப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமர்ப்பித்த அண்மைய அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதன் அடிப்படையில் விபத்தால் தாஜூடீன் உயிரிழக்க வில்லை.

அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியிருந்தனர்.

விலா எலும்பு முறிந்து காணப்பட் டதுடன், உடைந்த போத்தல்களால் குத்தப்பட்டதற்கான அடையாளங்களும் தாஜூடீனின் சடலத்தில் காணப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித் துள்ளனர்.

ரகர் வீரரான தாஜூடீனின் மரணம் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. நாரஹேன்பிட்டி ஷாலிகா விளையாட்டு மைதானப் பகுதியில் அவர் பயணித்த கார் மதில் ஒன்றின் மீது மோதி எரியுண்ட நிலையில் காணப்பட்டது.

மரணம் இடம்பெற்ற பின்னர் வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கை யின்படி, வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தாஜூடீன் பயணித்த கார் மதிலில் மோதி தீப்பற்றியதாகவும், அதனால் அவர் எரியுண்டதாகவும் குறிப் பிடப்பட்டிருந்தது.

எனினும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட விசார ணைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் புதிய விடயங்களைக் கண்டுபிடித்திருந்தனர்.

பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத் துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply