ஏமன் நாட்டில் இரு முக்கிய நகரங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் கைப்பற்றினர்

alheidaஏமன் நாட்டில் கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் போராளிகளின் பிடியில் விழுந்த இரு முக்கிய நகரங்களை அல் கொய்தா தீவிரவாதிகள் இன்று கைப்பறியுள்ளனர்.ஏடென் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்யான் மாகாண தலைநகர் சின்ஜிபர் மற்றும் ஜார் ஆகிய நகரங்களை அராபிய வசந்தத்துக்கு பின்னர் உள்நாட்டுப் போராளிகள் கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு கும்பல் இவ்விரு நகரங்களில் முகாமிட்டிருந்த போராளிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடத்தியது. அந்நகரங்களுக்கு செல்லும் வழிகளில் உள்ள சோதனைச் சாவடிகளையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட அல் கொய்தா தீவிரவாதிகள் சின்ஜிபர் மற்றும் ஜார் நகரங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக இன்று காலை ஒலிபெருக்கிகளின் மூலம் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply