வாடிகனில் போப் கிறிஸ்துமஸ் உரை: நுகர்வு கலாச்சாரத்தை கைவிட்டு இயேசுவின் எளிமையை பின்பற்ற அழைப்பு

popstஉலகம் முழுவதுமுள்ள 1.2 பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிவரும் நிலையில், போப் ஆண்டவர் தனது கிறிஸ்துமஸ் தின உரையில், மக்களின் நுகர்வு கலாச்சாரத்திற்கு கடும் கண்டணம் தெரிவித்துள்ளார். இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வாடிகனில் நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ் “நாம் வாழும் சமூகம் அடிக்கடி நுகர்வு கலாச்சாரம், உலக இன்பம், செல்வம், ஊதாரித்தனம், அதீத சுய மோகம் ஆகியவற்றால் மதிமயங்கிவிடுகிறது. ஆனால், இன்று பிறந்த நாளை கொண்டாடும் இந்த குழந்தை(இயேசு) நம்மை எளிமையாகவும், சமநிலையுடனும், நிலையான பார்வையுடனும் வாழ்க்கையின் இன்றியமையாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அழைப்புவிடுக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தெய்வீக குழந்தையாக இருந்த போதிலும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்காக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இயேசுவின் எளிமையை அனைவரும் தங்களின் வாழ்விலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply