ஹிருனிக்கா மற்றும் அவரது தயார் மீது சட்டநடவடிக்கை

KIRUபாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் மார்ச் 29ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த இருவரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தமக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றை ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயாரான சுமனா பிரேமச்சந்திர ஆகியோர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளதாகவும், அதனை தன்னிடம் மீள ஒப்படைக்குமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், முறைப்பாட்டாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்துக்காகவே குறித்த கட்டடம் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீள வழங்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் கோரி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அந்த கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை எனவும் முறைப்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்னதாக தெமட்டகொடை பகுதியில் ஹிருணிகாவுக்கு சொந்தமான வாகனத்தில் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply