இலங்கை நாடாளுமன்றத்தில் கைகலப்பு: ஒருவர் மருத்துமனையில் அனுமதி

parlimentஇலங்கை நாடாளுமன்றதில் இன்று நடந்த கைகலப்பில் உறுப்பினர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது கருத்தை தெரிவித்துக்கொண்டிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலாப்பாக மாறியது.

இதன்போது தாக்குதலுக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இந்த விஷயம் தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அணியிருனக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் கரு ஜயசூர்ய நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

அவை நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியதையடுத்து, அவையின் மத்தியில் கூடிய துணை அமைச்சர் பாலித்த தேவப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அவையின் மத்தியில் கூடிய உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுப்பட்டனர்.

நாடாளுமன்றத்தின் பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்குடன், அவை நடவடிக்கைகளை நாளை வரை சபாநகர் கரு ஜயசூர்ய ஒத்தி வைத்தார்.

இன்றைய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் சபாநாயகர் பின்னர் அறிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply