புலம்பெயர்வோர் அதிகரித்து வருவது உலகளாவிய சவாலாக உள்ளது: ஜி-7 நாடுகளின் தலைவர்கள் வேதனை

g7பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்த நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் ஒன்றிணைந்து ஜி௭ என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் மாநாடு நடத்தி வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஜி௭ மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள இசே-ஷிமா நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்பட ஜி௭ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுவரும் இந்த மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தென் சீனக்கடலில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

குறிப்பாக, ஈராக், சிரியா போன்ற நாடுகளில் இருந்து பிறநாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக நீண்ட நேர ஆலோசனையும், விவாதமும் நடைபெற்றது. கடந்த ஆண்டில் மட்டும் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து 13 லட்சம் மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கேட்டிருந்தது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

 

பின்னர், பிறநாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது உலகளாவிய சவாலாக உள்ளதாக இம்மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

 

’புலம்பெயர்வோர் மற்றும் அகதிகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதை ஜி௭ அமைப்பு கவனித்து வருகிறது. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் அளிப்போருக்கு தேவையான உலகளாவிய உதவிகளை உடனடியாகவும், நீண்டகால அடிப்படையிலும் அதிகரிக்க நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்.

 

இவ்விவகாரத்தில் பொருளாதாரரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் உதவிட முன்வரும் சர்வதேச கொடையாளர்களை நாங்கள் ஊக்குவிப்போம்’ என ஜி௭ தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply