லிபியாவிற்கு இரண்டாவது யுத்தக் கப்பலை அனுப்ப பிரித்தானியா தீர்மானம்

camaroonலிபியாவிற்கு இரண்டாவது யுத்தக் கப்பலை அனுப்பவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் ஜி 7 மாநாட்டில் வைத்தே பிரித்தானிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். லிபியாவில் அதிகரித்துள்ள ஆள் கடத்தல், மற்றும் ஆயுத இயக்கங்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே பிரித்தானியா யுத்தக் கப்பலை அனுப்பி வைத்துள்ளது.

 

அத்துடன் மனிதக் கடத்தலை கட்டுப்படுத்த லிபியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லிபியாவில் தற்போது பிரித்தானிய ஆய்வு கப்பல் ஈடுபட்டு வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply