அகதிகள் வருகையால் நிதி நெருக்கடி: ஜோர்டான் பாராளுமன்றத்தை கலைத்து மன்னர் அப்துல்லா உத்தரவு

jordanசிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி, தங்கள் நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வருகையால் ஜோர்டான் கடும் பொருளாதார சிக்கலை சந்தித்துவரும் நிலையில், அந்நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்து மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.வெளிநாட்டு அகதிகள் வருகையால் கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஜோர்டான் நாட்டு பாராளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் மன்னரான அப்துல்லா, சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் முதல்கட்டமாக அந்நாட்டின் பிரதமரான அப்துல்லா என்சோர் என்பவரை ராஜினாமா செய்யவைத்த அவர், பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்களை கண்காணிக்க தற்காலிக காபந்து பிரதமராக ஹனி முல்கி என்பவரை மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply