வெனிசுலா நாட்டில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு 17 பேர் பலி
தெற்கு அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள வெனிசுலா நாட்டில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்மநபர்கள் 11 பேரை பிடித்து வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெனிசுலா நாட்டின் டிரிஜுல்லா மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நேற்று ஆயுதங்களுடன் ஒரு மர்ம கும்பல் புகுந்தது. அங்குள்ள வீடுகளில் குடியிருந்தவர்களை வெளியே இழுத்துவந்து வரிசையாக நிற்கவைத்து துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுவிட்டு, வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றது.
இந்த தாக்குதலில் 15, 16, 17 வயதைச் சேர்ந்த தலா ஒருவரும், 18 முதல் 76 வயதுக்குட்பட்ட எட்டு பேரும் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன. கொல்லப்பட்ட 76 வயது நபர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஆல்பர்ட்டோ டியாஸ் பாட்டினோ என்பது தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply