வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்ததாக தென் கொரியா தகவல்
வட கொரியாவின் முசுடான் ஏவுகணை சோதனை நான்காவது முறையாக தோல்வியில் முடிந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணுகுண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி மிக பயங்கரமான ஹைட்ரஜன் குண்டினை முதன் முதலாக வெடித்து சோதித்ததாக அறிவித்தது. சர்வதேச அளவில் இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கிற விதமாக ஐ.நா. புதிய பொருளாதார தடைகளை விதித்து கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும் வடகொரியா அதையும் பொருட்படுத்தவில்லை. ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மற்றொரு பக்கம் உலக நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதுடன், சிறிய அளவிலான அணுகுண்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த நாடு அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்ஜின் சோதனையை நடத்தி உள்ளது. அண்மையில், முசுடான் என்னும் ஏவுகணையை வடகொரியா உருவாக்கியது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு அணுகுண்டுகளை சுமந்து சென்று ஏவுகணை தாக்குதல் நடத்துகிற ஆற்றலை வடகொரியா பல்வேறு கட்டங்களாக அடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வடகொரியாவின் சக்தி வாய்ந்த இந்த முசுடான் ஏவுகணை சோதனை நான்காவது முறையாக தோல்வி அடைந்துள்ளதாக தென்கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், தென்கொரியா ராணுவத்தின் தளபதிகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிகாலை வேளையில், வடகொரியா அடையாளம் தெரியாத ஏவுகணையை பரிசோதிக்க முயற்சித்ததாகவும், ஆனால், இந்த சோதனை தோல்வியில் முடிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஏவுகணை மூலம், அமெரிக்க ராணுவ தளம், ஆசியா, பசுபிக் நாடுகள் ஆகியவற்றை தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக தென்கொரியா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply