உலக அளவில் 7.9 சதவீதம் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா

india2016-ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதர வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகின் வேகமான வளர்ச்சி என்று கணிக்கப்பட்டுள்ளது.மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2015-16ம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.5 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 7.6 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 7.2 சதவீதமும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியிருந்தது. இதன்மூலம் 2016-ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதன்படி 2015-16 நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது வேகமான வளர்ச்சி ஆகும்.

மத்திய புள்ளியல் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டு வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply