சட்டவிரோத ஆயுத ஒப்படைப்புக்கான காலம் நீடிப்பு :பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர
சட்டவிரோத ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 17 வரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும், பாதுகாப்பு அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மே 06 வரை வழங்கப்பட்டிருந்த குறித்த மன்னிப்புக் காலம், பின்னர் மே 30 வரை நீடிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவடைகின்ற நிலையில், ஜூன் 17 வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆயுதங்களை களைவதன் மூலம், பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கலாம் என்பதன் அடிப்டையிலேயே, குறித்த பொது மன்னிப்பு காலத்தை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்திருந்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply