முதலமைச்சர்களுக்கு தடைவிதிக்க இராணுவத்தினருக்கு அதிகாரமில்லை : ராஜித்த சேனாரட்ன
முதலமைச்சர்களுக்கு தடைவிதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கோ அல்லது படையினருக்கோ அதிகாரம் கிடையாது. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே எதிர்ப்புக்கள் கிளம்பின. இப்பிரச்சினையை ஜனாதிபதியும் பிரதமரும் சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளனர்.முதலமைச்சரை மக்களே தேர்ந்தெடுக்கின்றனர். மக்களின் ஆணை முதலமைச்சருக்கு கிடைக்கின்றது. எனவே முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக தடை விதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கும் படையினருக்கும் அதிகாரம் கிடையாது. இராணுவம் என்பது ஒரு திணைக்களமாகும்.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் தெரிவு செய்வதாகும். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளதோடு கவலையையும் தெரிவித்துள்ளார்.
எனவே படையினர் விதித்த தடையை ஜனாதிபதி நீக்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தைகளை நடத்தியே தீர்மானத்தை எடுத்தினர். எனவே இதில் எந்தவிதமான பிழையும் இல்லை.
அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்சியும் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டது. என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply