அமீர் கான் குறித்து சர்ச்சை பேச்சு: மனோகர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி கண்டனம்

ragulகடந்த ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர் கான்,  நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  நாட்டை விட்டு வெளியேறலாமா என தனது மனைவி கேட்டதாக கூறினார். இது பலத்த சர்ச்சையும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் ‘நாட்டை விமர்சித்து பேசியவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது’ என, பாலிவுட் நடிகர் அமீர் கான் குறித்து பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் அனைவருக்கும் பாடம் கற்பிக்க விரும்புகிறார்கள். வெறுப்புணர்வு என்பது கோழைகளை பாதுகாக்கும் ஆனால் அது ஒருபோதும் வெற்றி பெறாது. இதான் உங்களுக்கான பாடம்’ என்று கூறியுள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply