திருச்சி சிவாவை தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய எம்.பி. சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா அதிரடி
டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை தாக்கிய அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவை அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, சசிகலா புஷ்பாவை நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா டெல்லி விமான நிலையத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரித்தார்.
இதேபோல், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவும் இச்சம்பவம் தொடர்பாக தனது கட்சி தலைவர் கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க. தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அ.திமு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அ.திமு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply