தமிழ் அரசியல் கைதிகளால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்ற வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றத் தவறிவிட்டதனால், அக் கைதிகள் மீண்டும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 08ம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது,அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை நான் நம்புகின்றேன். நீங்கள் எங்களை நம்புங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தினை நிறைவு செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் இதுவரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தே எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் தமது உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பிக்க அரசியல் கைதிகள் முடிவு செய்துள்ளனர்.
குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பான கடிதமும், சிறைச்சாலை ஆணையாளருக்கு அரசியல் கைதிகளால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply