ஒலிம்பிக் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று போல்ட் சாதனை
ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்று, இந்த போட்டி பிரிவில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்றுமுறை தங்கப்பதக்கம் வென்ற பெருமையை உசையின் போல்ட் படைத்திருக்கிறார்.ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசையின் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார்.
முன்னதா,க தென்னாப்பிரிக்க தடகள வீரரான வேதே வான் நியெகெர்க், ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றதோடு, 43.03 வினாடிகளில் ஓடி புதிய உலகப் பதிவை உருவாக்கியிருக்கிறார். இந்த ஓட்டப் போட்டியில் 43.18 வினாடிகள் என்ற முந்தைய வரலாற்று பதிவானது 17 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் மைக்கேல் ஜான்சனால் படைக்கப்பட்டது.
பிரிட்டன் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆன்டி மர்ரி ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மர்ரி, அஜென்டீனாவின் யுயன் மாட்டின் டெல் போட்ரோவை கடுமையாக போராடி வென்றார்.
பதக்க வரிசைப் பட்டியலில் அமெரிக்கா முன்னிலை பெற்றிருக்க, ஐக்கிய ராஜ்யமும், சீனாவும் அடுத்த இடங்களில் உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply