கொழும்பில் மிகப்பெரிய சர்வதேச சரக்கு முனையம் இந்திய துணைக்கண்ட நாடுகளின் முதலீடுகளை நாடுகிறது இலங்கை

haberஇலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தை துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைக்கும் சர்வதேச சரக்கு முனையம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இலங்கையின் பெரும்பாலான கப்பல் போக்குவரத்து கொழும்பு துறைமுகத்தை மையமாக கொண்டே செயல்படுகிறது. அதனால் அதனை விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டிய அவசியம் அந்நாட்டிற்கு உருவாகியுள்ளது.

 

இலங்கை கப்பல் துறை ஆணையம் இதுவரை 80 மில்லியன் டாலர் தொகையை செலவு செய்து 430 மீட்டர் வரையிலான பணிகளை மேற்கொண்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முதலீடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் சர்வதே சரக்கு முனையத்தின் பணிகளை முடிப்பதற்கு இந்திய துணைக்கண்ட நாடுகளின் முதலீடுகளை இலங்கை நாடியுள்ளது.

 

இது தொடர்பாக இலங்கை கப்பல்துறை மந்திரி அர்ஜூனா ரணதுங்கா கூறியதாவது:-

 

கொழும்பு துறைமுகத்தில் பாதி கட்டி முடிக்கப்பட்ட கிழக்கு சரக்கு முனையத்தின் பணிகளை முடிக்க 400 மில்லியன் டாலர் முதலீட்டை வெளிநாடுகளில் இருந்து முதலீடாக இலங்கை துறைமுக ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

 

இந்தியா, பாகிஸ்தான் அல்லது வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

எங்களிடம் முதலீடு செய்ய பணம் இல்லை. ஆனால் இந்த மிகப்பெரிய சரக்கு முனையத்தை மேம்படுத்த 15 சதவீதம் கூட்டு முயற்சியின் மூலம் மேற்கொள்ள நினைக்கிறோம்.

 

இவ்வாறு தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply