52 ஆண்டுகளுக்கு பிறகு கொலம்பியாவில் சண்டை நிறுத்தம்; உடன்பாட்டுக்கு ஒபாமா பாராட்டு

obamaதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக அரசு படைகளுக்கும், இடதுசாரி ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. இதன் காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.இந்த நிலையில் அரசுக்கும், ‘பார்க்’ கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.

 

இதுதொடர்பாக கொலம்பியா அரசும், ‘பார்க்’ சமரசப் பேச்சுவார்த்தை குழுவினரும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

 

இதுபற்றி கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் குறிப்பிடுகையில், “கஷ்டம், வேதனை, துயரம் ஆகியவற்றின் முடிவுக்கான ஆரம்பம்தான் சண்டை நிறுத்த உடன்பாடு” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜூவான் மேனுவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தியதற்காக ஜூவான் மேனுவலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply