இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களை நேரடியாக பார்வையிடுவார் பான் கீமூன்: அமைச்சர் மங்கள

MANGALA2நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31ஆம் திகதி இலங்கை க்கு வருகை தரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்குள் உருவா க்கப்பட்டிருக்கும் பாரியளவிலான மாற்றங்களை அவருடைய கண்களாலேயே பார்ப்பார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் வலி,வடக்கில் காணி இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளையும், வீட்டுதிட்டத்தையும் பார்வை யிட்ட துடன், மல்லாகம்- கோணப்புலம் நலன்புரி நிலையத்திற்கும் விஜயம் மேற்கொ ண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போதே பான்கீமூனின் இலங்கைக்கான விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம்- காலி ஆகிய பகுதிகளுக்கும் நாம் அவரை அழைத்துச் செல்வதன் ஊடாக வடக்கு, தெற்கு மாகாணங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுக ளையும் அவருக்கு காண்பிக்க உள்ளோம்.

மேலும், கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நியூயோர்க்கில் .நா செயலாளர் நாயகத்தை சந்தித்திருந்தபோது விடுத்திருந்த அழைப்பினை தொட ர்ந்தே செயலாளர் நாயகம் 2 நாள் விஜயமாக இலங்கை வருகின்றார்.

விசேடமாக இலங்கைக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அளவிலான மாற்றங்களை அவர் தன்னுடைய கண்களாலேயே பார்த்து கொள்ள முடியும்.

மேலும் யாழ்ப்பாணம் மட்டுமல்லாமல் காலிக்கும் அவரை நாம் அழைத்துச் செல்வதன் ஊடாக வடக்கு,தெற்கு மாகாணங்களுக்கிடையில் உள்ள வேறு பாடு களையும் அவருக்கு நாங்கள் காண்பிக்க போவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply