பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இணைந்து செயல்பட ஜி-20 தலைவர்கள் சம்மதம்: ஏஞ்சலா மெர்கல்

G20சீனாவின் ஹாங்சோ நகரில் இரண்டு நாள் ஜி-20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இணைந்து செயல்பட ஜி-20 தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஜி-20 அமைப்பில் சீனா தனது தலைமை காலத்தில் மேற்கொண்டு வரும் உள் கட்டமைப்பு சீர்திருத்தங்களை வரவேற்றார். அடுத்த ஆண்டு ஜெர்மனி தலைமையை ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஜி-20 அமைப்பின் டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

இதனிடையே மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், பாதுகாப்பு வாதம் என்ற கருத்து சர்வதேச பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருவதாக தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply