அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை முடியும் முன் அலெப்பே நகரை முற்றுகையிடும் சிரிய ராணுவம்
சிரியாவில் ஐ.எஸ். படைகளுக்கும் அதற்கு எதிரான பன்னாட்டுப் படைகளின் ஆதரவைப் பெற்ற சிரிய அரசுப் படைகளுக்கும் எதிராக தீவிர போர் நடந்து வருகிறது. சமீப காலங்களாக சிரிய அரசுப் படை குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்று வருகிறது. சிரியாவின் வணிக மற்றும் தொழில் களமாகத் திகழ்ந்த இடம் அலெப்போ. இதனை ஐ.எஸ். தம் வசம் வைத்துள்ளது. இதனைக் கைப்பற்ற கடந்த சில நாட்களாக சிரிய அரசு முயன்று வருகிறது.
இதனால் அலெப்பே மீது ரஷ்ய விமானங்கள் வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த விவகாரத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தற்போது தோல்வியில் முடியும் தருவாயில் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் தருவாயில் உள்ள நிலையில், சிரிய ராணுவம் மற்றும் கூட்டணி படைகள் அலெப்பே நகரின் தெற்கு பகுதியில் நுழைந்துள்ளது.
இதனிடையே, துருக்கி படைகள் மற்றும் சிரியா கிளர்ச்சியாளர்கள் இணைந்து சிரியா-துருக்கி எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply