அந்நியர்கள் குடியுரிமை பெறுவது அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு ஆதரவாக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறும் மக்கள் உள்நாட்டினரின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை பறித்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் இந்த வாக்கெடுப்பே நடத்தப்பட்டது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கிலாந்தில் குடியுரிமை பெறும் விவகாரம் அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் தெரசா மே வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தெரசா மே கூறியதாவது:-
ஜூன் 23-ம் தேதி மக்கள் வாக்களித்தது என்பது ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்திற்குள் மக்கள் குடியேறுவதை கட்டுப்படுத்தும் காரணத்திற்காக தான்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு அந்நியர்கள் குடியுரிமை பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட அமைப்பு உருவாக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சீனாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply