சீன விமான நிலையத்தில் ஒபாமாவுக்கு அவமதிப்பா? அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

obamaசீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டார். அதற்காக அவர் விமானத்தில் வந்தபோது, விமானத்தில் இருந்து இறங்குவதற்கு வசதியாக, படிக்கட்டுகளுடன் கூடிய நகரும் ஏணி வசதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த ஏணி, மற்ற நாட்டு தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட சாதாரண ஏணி என்பதால், ஒபாமாவை சீனா அவமதித்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களுக்கும், சீன அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதற்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘மற்ற நாட்டு தலைவர்கள் எல்லாம் நாங்கள் அளித்த நகரும் ஏணியை பயன்படுத்தினர். அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? நாங்கள் வேண்டுமென்றே பிரச்சினையை உண்டாக்கவில்லை. எங்களது ஏற்பாடுகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், இந்த சம்பவமே ஏற்பட்டு இருக்காது. அதுபோல், அமெரிக்க பத்திரிகையாளர்களும் சீன விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply