மருத்துவமனையில் தமிழக முதல்வரை சந்தித்த பொறுப்பு ஆளுநர்

jeyaஉடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல முறையில் குணமடைந்து வருவதில் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் தெரிவித்திருக்கிறார்.கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உடல்நலம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராகப் பதவி வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று மாலையில் சென்னை வந்தார். மாலை 6.40 மணியளவில் மருத்துவமனைக்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பிறகு 7.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதற்குப் பிறகு ஆளுனர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், மருத்துவனைக்குச் சென்ற ஆளுனருக்கு அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி பிரதாப் ரெட்டி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரித்ததாக கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவரும் வார்டுக்கு சென்று ஆளுனர் பார்த்ததாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு விரிவாக விளக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக கூறப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஆளுனர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு வந்த ஆளுனரை, மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply