கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை செலுத்த புதிய நீர்மூழ்கி கப்பலை கட்டுகிறது, வடகொரியா

Korea உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் அந்த நாடு, ஐந்தாவது முறையாக அணு குண்டு வெடித்து சோதித்தது. இந்த அணுகுண்டு சோதனையின் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற ஏவுகணைகளில் அணுகுண்டுகளை பொருத்தி ஏவுகிற ஆற்றலை பெற்று விட்டோம் என்று வடகொரியா கூறியது.

 

இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அந்த நாடு மீது ஐ.நா. சபை புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கி உள்ளது.இந்த நிலையில் வடகொரியா மிக நீளமான நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கட்டுகிற முயற்சியில் இறங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

செயற்கை கோள் படங்களை மேற்கோள் காட்டி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க–கொரிய இன்ஸ்டிடியூட் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், வடகொரியாவின் சின்போ சவுத் கப்பல் கட்டும் தளத்தில் புதிய நீர்மூழ்கி கப்பல் கட்டும் பணி நடந்து வருவதை வணிக செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன என கூறப்பட்டுள்ளது.

 

இது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குகிற ஏவுகணைகளை ஏவுவதற்கு இந்த கப்பல் கட்டப்படுவதாக தெரிய வந்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply