‘இந்தியாவை பாகிஸ்தான் பதிலுக்கு மிரட்ட வேண்டும்’ முன்னாள் அதிபர் முஷரப் ஆவேசம்

musarafஇந்தியாவை பாகிஸ்தான் பதிலுக்கு மிரட்ட வேண்டும் என்று முன்னாள் அதிபர் முஷரப் ஆவேசமாக கூறினார்.துபாயில் முஷரப்பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 73). முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி தவித்தார். இதன்காரணமாக அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை, கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் விலக்கிக் கொள்ளப்பட்டது.அதைத் தொடர்ந்து அவர் தனது முதுகுத்தண்டில் பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை பெறச் செல்வதாகவும் கூறி துபாய்க்கு சென்றார். அதன்பிறகு அவர் நாடு திரும்பவில்லை.மோடி மீது தாக்குஇந்த நிலையில் அவர் தனது அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் 6-வது நிறுவன நாளையொட்டி, கட்சி தொண்டர்களுடன் தொலைபேசி வழியாக பேசினார்.

அப்போது அவர் இந்தியாவின் அணுகுமுறையையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெகுவாக சாடினார்.மோடி, இந்தியாவில் வாழ்கிற சிறுபான்மை மக்களின் எதிரி என விமர்சித்தார்.“இந்தியா, பாகிஸ்தான் மீது மிரட்டல் விடுவதில்தான் நல்ல நாடு. பாகிஸ்தான், பூடான் அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும். இந்திய மண்ணில் எப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றாலும், பாகிஸ்தானை நோக்கி குற்றம் சாட்டுவதை இந்தியா வழக்கமாக்கிக்கொண்டு விட்டது” என்று கூறினார்.பதிலுக்கு மிரட்டல்முஷரப், வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ‘வாஷிங்டன் கருத்துக்கள் மன்றம்’ என்ற அமைப்பில் பேசும்போது, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அப்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், “நான் இந்தியாவுக்கு பதில் மிரட்டல் விடுவேன்” என கூறினார். இந்தியாவுக்கு பாகிஸ்தான் பதில் மிரட்டல் விடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் வலியுறுத்தினார்.போர் வெறித்தனம்பதில் மிரட்டல் பற்றி கேள்வி கேட்டபோது, “ஆமாம், அவர்கள் பாகிஸ்தானை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களை தாக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த முறை பிரதமர், ராணுவ மந்திரி, ராணுவ தளபதி, ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் தலைமை இயக்குனர் ஆகியோர் மிரட்டுகிறார்கள். இது மிகவும் முக்கியமான பிரச்சினை. விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் தாக்குதல் நடத்துவோம் என்று அவர்கள் மிரட்டக்கூடாது” என்று பதில் அளித்தார்.மேலும், “பாகிஸ்தான் என்ன செய்யும்? நாமும் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தாக்குதல் நடத்துவோம். இது போரை உண்டாக்கும். எனவே இதை செய்யக்கூடாது. போர் வெறித்தனம், இந்தியாவில் தான் உருவாக்கப்படுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியாவால்தான் பிரச்சினை. அவர்கள் எப்போதும் பிரச்சினைதான். இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும்” எனவும் கூறினார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply