முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை

jeyaதமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த சிகிச்சையே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற முதல்வர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

jeya

முன்னதாக நேற்று இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள், சுவாச உதவி மற்றும் தொடர்புடைய அனைத்து மருத்துவ உதவிகளும் கிருமி தொற்று சிகிச்சைக்காக தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

முதல்–அமைச்சருக்கு வழங்கப்படும் முழுமையான சிகிச்சைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். டாக்டர்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இன்னும் தங்கியிருக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply