அமெரிக்க அதிபர் தேர்தல்: செக்ஸ் புகாருக்கு டொனால்டு டிரம்ப் மறுப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஓட்டு பதிவு நெருங்கிவரும் சூழ்நிலையில் டிரம்ப் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டு பெண்கள் பற்றி டிரம்ப் இழிவாக கூறிய கருத்துக்கள் வீடியோ ஆக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜெசிக்கா லீட்ஸ், ரசேல் குரூக்ஸ் ஆகிய 2 பெண்கள் டிரம்ப் மீது செக்ஸ் புகார் கூறினர். விமான பயணத்தின் போது ‘செக்ஸ்’ குறும்பில் ஈடுபட்டதாக ஜெசிக்கா லீட்ஸ்சும், டிரம்ப் நிறுவனத்தில் பணிபுரிந்த போது தன்னை கட்டிப்பிடித்து அவர் முத்தமிட்டதாக ரசேல் குரூக்சும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டி அளித்தனர். இதனால் டிரம்ப் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அப்பெண்களின் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது தன் மீது கூறப்பட்ட ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றார்.
மேலும் கூறும் போது, அந்த பெண்கள் பயங்கரமான பொய்கள் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார்கள். பத்திரிகைகளும் ஊடகங்களும் எனது எதிரி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றார்.
அதிபர் ஒபாமா மனைவி மிச்செலி நியூ ஹாம்ஷிரில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்பை கடுமையாக சாடினார். தலைவர்கள் மனித நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் டிரம்ப் பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளார். அவர்கள் அதிர்ச்சியும், மரியாதை குறைவும் அடைந்துள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply