எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

egyptianஎகிப்தில் சினாய் தீப கற்ப பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இந்த நிலையில் நேற்று வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் ரபா, ஷேக் ஷூவை யத் மற்றும் அல்-அரீஷ் ஆகிய தீவிரவாதிகள் முகாம்கள் மீது ராணுவ போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.அதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். சினாய் துறைமுகம் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து குடோன்களும் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தகவலை எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனைச்சாவடியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்க இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply