மூன்றுநாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே நவ.6-ம் தேதி இந்தியா வருகை
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற பொதுவாக்கெடுப்பை அடுத்து பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். அந்நாட்டின் புதிய பிரதமராக தெரசா மே(60) கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்றார்.உலக நாடுகளுடனான நல்லுறவுகளை புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டிவரும் தெரசா மே, மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக வரும் நவம்பர் 6-ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் என்ற முறையில் ஐரோப்பிய கண்டத்தை கடந்து, முதன்முறையாக இந்தியாவுக்கு வருகைதரும் தெரசா மே, தனது பயணத்தின்போது டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-பிரிட்டன் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மேலும் இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கிடையிலான கூட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக கமிட்டி ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கும் அவர், இருநாடுகளுக்கிடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது இருநாடுகளுக்கு இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply