யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தமை சாதாரணமான சம்பவம் :ஹெட்டியாராய்ச்சி

hettiயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தெற்கில் சாதாரணமாக இடம்பெறும் சம்பவம் போன்றதே இது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.இன்று பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் விபத்து என கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு மாணவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை பின்னர் தெரியவந்தது.

அதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிசார் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர்,இலங்கையின் தெற்கிலும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறுகின்றன எனவும், இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply