கிரீஸ் நாட்டில் அகதிகள் முகாமில் தீ : இருவர் பலி

greesஉள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.

மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீபகாலமாக ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 21 லட்சத்தை எட்டியுள்ளது.

ஐரோப்பிய யூனியனுக்கு உட்பட்ட நாடுகளுடன் துருக்கி செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, இவ்வாறு அகதிகளாக வரும் மக்கள் அனைவரும் இங்குள்ள ஐந்து தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் முதலில் தங்கவைக்கப்படுகின்றனர்.

பின்னர், தாங்கள் குடியேற விரும்பும் நாடுகளின் அரசுக்கு அவர்கள் மனுச்செய்ய வேண்டும். இவ்வாறு, கிரீஸ் நாட்டின் லெஸ்வோஸ் தீவில் உள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் மட்டும் சுமார் 6 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லெஸ்வோஸ் தீவின் மோரியா பதியில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் ஒரு கூடாரம் நேற்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்துக்கேற்ப மற்ற கூடாரங்களுக்கும் தீ பரவியது.

இந்த விபத்தில் 66 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும், 6 வயது குழந்தையும் தீயில் கருகி பலியானதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கிரீஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply