பிடல் காஸ்ட்ரோவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது

castoகியூபா நாட்டின் அதிபராகவும், பிரதமராகவும் சுமார் அரை நூற்றாண்டுக்காலம் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2008-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார். அதன்பின்னர் மிக அபூர்வமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார்.

விதவிதமான சுருட்டுகளை பிடிப்பதில் பிரியம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு பரிசளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட 90 அடிநீளம் கொண்ட சுருட்டு கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், சிலநாட்களாக முதுமைசார்ந்த உடல் நலக்குறைவினால் பாதிக்கபட்டிருந்த பிடல் காஸ்ட்ரோ, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் காலமானதாக அவரது சகோதரரும் அந்நாட்டின் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.

கியூபாவின் புரட்சித் தலைவர் என்றழைக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவின் உடல் அரசு மரியாதைகளுடன் நாளை (சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் எனவும் ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply