லசந்த -மஹிந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் மஹிந்தவின் விளக்கம்

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

நான் லசந்த விக்கிரமதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடுவது வழமையான ஒன்றாகும். நானும் லசந்த விக்கிரமதுங்கவும் தொலைபேசியில் உரையாடும் வகையில் வெளியாகியுள்ள ஒலிப்பதிவு சிலவேளை உண்மையானதாக இருக்கலாம். எனினும் நான் இதனை கதைத்தேனா அல்லது இல்லையா என்று ஞாபகம் இல்லை எனவும் ஆனால் தொலைபேசியில் கதைப்பதையெல்லாம் லசந்த பதிவு செய்வதை அவருடைய வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த உரையாடல் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக இருவருக்கும் இடையிலான உரையாடல் மூலம் தெரியவருதோடு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவுரை கூறும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply