பெர்லின் கிறிஸ்துமஸ் தாக்குதல் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் இத்தாலியில் சுட்டுக் கொலை

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கான கடைகள் போடப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென கடைகள் போடப்பட்டிருந்த பகுதிகளுக்குள் ஒரு லாரி அதிவேகமாக புகுந்தது. இந்த தாக்குதலில் 12 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்தில் 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

 

இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அனிஷ் அம்ரி என்பரை ஜெர்மன் போலீசார் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் அனிஷ் அம்ரி, இத்தாலி நாட்டின் மிலன் என்ற பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

 

இதனிடையே, ஐ.எஸ் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் அதன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதிக்கு அம்ரி விசுவாசமானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply