புதிய கட்சி துவக்கினார் கருணா அம்மான்
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிச் சென்ற, கருணா அம்மான், புதிய கட்சியை துவக்கி உள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதியாக இருந்தவர், விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும், கருணா அம்மான்.புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து, அதில் இருந்து வெளியேறினார்.இதன்பின், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற, விடுதலைப் புலிகள் அதிருப்தி கட்சியில் சேர்ந்தார். முன்னாள் அதிபர், மகிந்தவின் அரசில் அமைச்சராகவும் பணியாற்றிஉள்ளார்.இதற்டையில், தமிழர்களின் நலனுக்காக, தமிழ் ஐக்கிய விடுதலைக் கட்சி என்ற, புதிய கட்சியை துவக்கியுள்ளதாக, மட்டக்களப்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருணா அம்மான் அறிவித்துள்ளார்.
கட்சியை பதிவு செய்வது குறித்து, தேர்தல் கமிஷனுடன் பேசி வருவதாகவும், தமிழ் மக்களின் நலனுக்காக, தன் கட்சி போராடும் என்றும், கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply