புத்தளம் முந்தல் பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
புத்தளம் முந்தல் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று(16) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10மில்லியன் ரூபாய் பெறுமதியான 1.05 கிலோகிராம் ஹெரோயினுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப் பொருள் கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவரிம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : TELOnews, இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply