சவுதி அரேபியாவுடன் செய்து கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றபோது அந்நாட்டுடன் 110 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.தற்போது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள டிரம்பிற்கு அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சவுதி அரேபியாவுடன் செய்துக்கொண்ட ஆயுத ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த டெட் லியூ மற்றும் டெட் யோகோ ஆகிய இருவர் வெளியுறவுக் குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறுகையில் , ‘சவுதி அரேபியாவுடன் ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது ஆபத்தானது.
அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை சவுதி அரசாங்கத்திற்கு வழங்கினால் அவர்கள் அவற்றை தவறான வழியில் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
குறிப்பாக, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில் சவுதியும் ஈடுப்பட்டு வருவதால் அந்நாட்டில் இந்த ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் ஏமன் நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து ஜனாதிபதி டிரம்ப் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply