பொருளாதார இழப்புகள்; மாவட்ட ரீதியில் தகவல் தருமாறு பிரதமர் பணிப்பு
வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம் மற்றும் சேதங்கள் பற்றிய அறிக்கையை நாளை (02) தனக்கு கையளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலாளர்களுக்கு பணித்துள்ளார். இது தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
உயிர் சேதங்களுக்கு வழங்கும் காப்புறுதி நஷ்ட ஈட்டை துரிதமாக வழங்குமாறும் பிரதமர் பணித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் கயந்த, பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள கடன் பெற்ற மக்களுக்கு சலுகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்ட அவர்:
இதன்படி 2017 மே (29) வரை அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்றுள்ள பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு கடனை திருப்பிச் செலுத்த 3 மாத கால சலுகை வழங்கவும் பிரதமர் பணித்துள்ளார். இது தொடர்பில் மத்தியவங்கி சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்ததை கட்டியெழுப்புவதற்கு மேலதிக நிதி வழங்கவும் பிரதமர் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தற்பொழுது 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிடைக்கும் சகல உதவிகளையும் வீடுகள் கட்டுவதற்காக வழங்குவது உகந்ததென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அதற்காக முன்னுரிமை வழங்கப்படும்.வீடுகளை நிர்மாணிக்க பல அமைச்சுகளும் முன்வந்துள்ளன. வீடுகளை திருத்துவதற்கு அரசாங்கம் உதவி வழங்கும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply