தென்மேற்கு பிராந்தியங்களில் இன்று மீண்டும் அடைமழை

இலங்கையின் தெற்மேற்கு பிராந்தியங்களில் இன்று வெள்ளிக்கிழமை அடைமழை பெய்யக்கூடும் என்றும், கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 75 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த வாரம் தென்மேற்கு பிராந்தியங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவால் பாரிய உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டன. எனினும், கடந்த ஓரிரு நாட்களாக மழை குறைவடைந்திருந்தது.

இந்நிலையிலேயே இன்று தென்மேற்கு பிராந்தியங்களில் அடைமழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

“மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென்மாகாணங்களிலும் அடிக்கடி அழைபெய்யக்கூடும். கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் 75 மி.மீ. அதிக மழைவீழ்ச்சி பெய்யும். இதன்போது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும்.

கிழக்க, ஊவா, வடமத்தியம் ஆகிய மாகாணங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் பிற்பகல் வேளைகளில் மழைபெய்யக்கூடும்” என்று வானிலையாளர் மொஹமட் சாலீதின் தெரிவித்தார்.

அதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், வெள்ளம் மற்றும் மண்சரிவால் 6 இலட்சத்து 46 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

203 பேர் உயிரிழந்துள்ளனர். 63 பேர் காயமடைந்துள்ளனர். 95 பேர் காணாமல்போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்தும் படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

8 ஆயிரத்து 63 வீடுகள் பகுதியளவும், ஆயிரத்து 583 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply