அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்கா வருகை!
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இரண்டு வாரகாலப் பயணம் மேற்கொண்டு சிறிலங்கா வந்துள்ளனர். அமெரிக்காவின் ஒதுக்குப் படையைச் சேர்ந்த 33 அதிகாரிகள் பயிற்சிப் படையணியைச் சேர்ந்தவர்களே சிறிலங்கா வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு சிறிலங்காவில் தங்கியிருக்கும்போது, தியத்தலாவ பயிற்சி முகாமில், ஜூன் மாதம் 7ஆம் நாள் வரை ஆயுதங்களைக் கையாள்வது, களமுனை நடைமுறைகள், உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளை சிறிலங்கா இராணுவம் வழங்கவுள்ளது.
அந்துடன் இந்த அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவ அகடமி, மேற்குப் பிராந்திய இராணுவத் தலைமையகம், பொறியியல் படைப்பிரிவின் தலைமையகம், இலகு காலாற்படை தலைமையகம், மின்னேரியாவில் உள்ள ஆட்டிலறி பாடசாலை உள்ளிட்டவற்றுக்கும் சென்று பாரை்வையிடவுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply