புர்கா அணிந்து வந்தே ISIS பயங்கரவாதிகள் ஈரான் பாராளுமன்றத்துக்குள் தாக்குதல்
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குழுவொன்று ஈரான் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்துவதற்கு முஸ்லிம் பெண்கள் அணியும் முகமூடி ஹபாயா ஆடையைப் பயன்படுத்தியுள்ளதாக ஈரான் பிரதி உள்விவகார அமைச்சர் மொஹமட் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.இந்த குழுவில் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்த ஒருவர் பாராளுமன்றத்துக்குள்ளேயே குண்டை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். பாராளுமன்றத்துக்குள்ளும் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஐந்துபேர் சந்தேகத்தின் பேரில் ஈரான் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தியை மேற்கோள்காட்டி இன்றைய தேசிய சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply