காணாமல்போனோர் அலு­வ­லகம் வடக்கில் அமை­க்கப்பட வேண்டும் : இரா.சம்­பந்தன்

காணா­ம­லாக்­கப்­பட்டோ அலு­வ­லகம் பற்­றிய சட்டம் தாம­த­மின்றி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று சபையில் வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் வட மாகா­ணத்தின் வன்னி பகு­தியில் அந்த அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.பாரா­ளு­ம­னத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற காணா­மற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம்(தாபித்­தலும், நிர்­வ­கித்­தலும், பணி­களை நிறை­வேற்­று­தலும்) திருத்­தச்­சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பான அலு­வ­ல­கத்­தினை தாபிக்கும் சட்­டத்­தினை தற்­போது வரையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதனை இட்டு நாம் கவலை அடை­கின்றோம்.

ஒருவர் காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தா­னது குற்றம் என்­ப­தற்கு அப்பால் அது கொலைக் குற்­ற­மாகும். ஒருவர் கொலை செய்­யப்­ப­டும்­போது தெளி­வாக கொலை செய்­யப்­பட்டார் என்­பதை அறிந்து கொள்­ள­மு­டியும். அதன் பிர­காரம் அதற்கு கார­ண­மா­ன­வரை சட்­ட­ரீ­தி­யாக தண்­டிக்­கலாம்.

ஆனால் ஒருவர் காண­ம­லாக்­கப்­படும் போது அதற்கு கார­ண­மா­ன­வரை அறிந்து கொள்­வதில் சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு காண­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­களை அறி­வ­தற்­கா­கவே இந்த சட்டம் அமுல்­ப­டுத்த வேண்டும் என்று கோரு­கின்றோம்.

வடக்கு கிழக்கில் பல ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காண­ம­லாக்­கப்­பட்­டார்கள் என்ற கருத்து காணப்­ப­டு­கின்­றது. 20ஆயிரம் பேர் காண­ம­லாக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­கு­ழுவின் முன்னால் சாட்­சியம் அளித்­துள்­ளனர். இரா­ணுவ தரப்பில் 5ஆயிரம் காணா­மல்­போ­னார்கள் என்றும் சாட்­சியம் அளித்­துள்­ளனர்.

காணமல் போன­வர்கள் தொடர்பில் விசா­ரணை செய்­யப்­ப­ட­வேண்டும். சிவி­லி­யன்­க­ளாக இருக்­கலாம், இரா­ணு­வத்­தி­ன­ராக இருக்­கலாம் காணமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு அவர்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும்.

காண­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக ஐ.நா தீர்­மா­னத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­ன­தாக இந்­த­ச­பையில் பல தட­வை­களில் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உண்­மைகள் கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்று நாம் சுட்­டிக்­காட்­டினோம். அரச தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். சர்­வ­தேச தரப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி வலி­யு­றுத்­தல்­களைச் செய்தோம். ஆனால் தற்­போது வரையில் எதுவும் நடை­பெ­ற­வில்லை. தாமதம் காணப்­ப­டு­கின்­றது.

உற­வுகள் காணா­ம­லாக்­கப்­பட்­ட­மை­யா­னது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களின் வாழ்க்­கையில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யு­யள்­ளது. ஆகவே இந்த விடயம் மென்­மேலும் தாம­தப்­ப­டுத்­தப்­படக் கூடாது.

இதன் அலு­வ­லகம் கொழும்பில் அமை­யப்­போ­கின்­றது. இந்த அலு­வ­லகம் வட­மா­கா­ணத்தில் அமைய வேண்டும். விசே­ட­மாக வன்னி பிர­தே­சத்­திற்கு வவு­னி­யாவில், கிளி­நொச்­சியில் இந்த அலு­வ­லகம் காணப்­ப­ட­வேண்டும் என்று கோரு­கின்றோம்.

இந்த சட்டம் எப்­போது அமு­லுக்கு வரும் என்று கூறப்­ப­ட­வில்லை. இதற்­கான அமைச்சர் இன்­னமும் இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. ஆகவே அந்த விட­யங்­களில் உட­ன­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என நான் கோரு­கின்றேன்.

காணா­ம­லாக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­திற்கு நிய­மிக்­கப்­ப­டு­ப­வர்கள் அது தொடர்­பான அனு­ப­வத்­தினை கொண்­டி­ருக்க வேண்டும். இந்த அலு­வ­ல­கத்­திற்கு வருகை தரு­ப­வர்­க­ளுக்கு வேண்­டிய உள ஆலோ­ச­னைகள், இழப்­பீ­டுகள், வழங்­கு­வ­தற்­கு­ரிய மன­நிலை உடை­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும.

முறைப்­பாட்­டா­ளர்­களின் கூற்­றுக்கு அமை­வாக வேண்­டிய இடங்­களில் சென்று விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளப்­ப­டு­ப­வர்­க­ளா­கவும் ஒரு­வேளை அவர்கள் புதைக்­கப்­பட்டு விட்­டார்கள் என்றால் அங்கு சென்று கூட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளக் கூடி­ய­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

எமது மக்­களில் ஒரு பகு­தி­யினர் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் விடயம் குறித்து நாம் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வில்லை என்று ஒரு பகு­தி­யினர் குறிப்­பி­டு­கின்­றனர். உண்­மை­யி­லேயே நாம் பல்­வேறு வலி­யு­றுத்­தல்­களை செய்தும் அது தெடர்­பாக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மைக்கு இரண்டு காரணம் காணப்­ப­டலாம்.

தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தப்­படும் என்­பது ஒன்­றாகும். மற்­றை­யது விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக போரா­டிய இரா­ணு­வத்­தினர் சட்டத்திற்கு முன்னாள் நிறுத்தப்படுவார்கள் என்ற பிரசாரம் கூட்டு எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டு வருகின்றமையும் ஆகும்.

அவ்வாறான கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை. உண்மையிலேயே காணமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதே இந்த அலுவலகத்தினை உருவாக்குவதற்கான பிரதான நோக்கமானதாகும்.

அதற்காகவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் காலதாமதமின்றி காமணலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்தினை உடனடியாக தாபிக்க வேண்டும். அந்த அலுவலகத்தின் அங்கம் நிச்சயமாக வடமாகாணத்தில் தாபிக்கப்படவேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply