வெனிசுலாவில் சுப்ரீம் கோர்ட்டு மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்: ராணுவ அதிகாரி வெறிச்செயல்
தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிகோலஸ் மதுரோ (54) அதிபராக பதவி வகிக்கிறார். அவருக்கு எதிராக கடந்த 3 மாதங்களாக வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அவர் பதவி விலக கோரிக்கை வலுத்து வருகிறது.தலைநகர் கராகஸ் நகரில் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. நேற்று அதன் மீது போலீசார் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பிறந்தது. அதில் அமர்ந்து இருந்த போலீஸ் அதிகாரி முகத்தை துணியால் மறைத்தபடி அமர்ந்து இருந்தார்.
திடீரென அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுப்ரீம் கோர்ட்டு மீது சரமாரியாக சுட்டார். மேலும் கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினார்.
இப்பகுதியில்தான் அதிபர் அரண்மனையும், மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டன.
உடனடியாக ராணுவமும், போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு அந்த ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே இத்தாக்குதலால் ஏற்பட்ட உயிர்சேதம், காயம் மற்றும் பொருட்சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இத்தகவலை அதிபர் நிகோலஸ் மதுரோ டெலிவிஷனில் தெரிவித்தார். அப்போது இது தனது எதிர்ப்பாளர்களின் தீவிரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply