வங்காளதேசத்தில் இந்திய மாணவர் குத்திக்கொலை: நண்பர் வெறிச்செயல்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு நண்பர்கள் வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் அங்குள்ள சிட்டகாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளனர். இதில் வின்சன் மைஸ்னம் சிங் என்னும் மாணவர் நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த அதீப் ஷேக் என்ற மற்றொரு மாணவர், அவரை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வின்சம், கூர்மையான ஆயுதத்தை கொண்டு சேக்கை பயங்கரமாக தாக்கியுள்ளார். பின்னர் அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றி அறிந்த அருகில் வசித்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரையும் சோதித்த மருத்துவர்கள் ஷேக் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்கொலைக்கு முயன்ற வின்சன் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷேக்கை கொலை செய்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த வின்சன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மாணவர் ஒருவர் நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply