ஈரான் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மதகுரு உள்ளிட்ட 2 பேருக்கு கத்திக்குத்து

ஈரான் நாட்டில் டெக்ரான் நகரில் ஷார் இ மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஒரு மத குருவை அடையாளம் தெரியாத ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த சம்பவத்தின்போது மற்றொருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.இதைக் கண்டவுடன் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.

உடனே அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் கத்திக்குத்து நடத்தியவரை சுட்டுக்கொன்றார். இதை ஷார் இ மாவட்ட துணை கவர்னர் ஹாதி டாம்ஹிதி உறுதி செய்தார்.மெட்ரோ ரெயில் நிலைய செய்தி தொடர்பாளர் இந்த சம்பவம் பற்றி குறிப்பிடுகையில், “இந்த சம்பவத்துக்கு பின்னர் இப்போது ஷார் இ மெட்ரோ ரெயில் நிலையத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது” என்று கூறினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply