டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றத்தை கண்டித்து பாராளுமன்றம் எதிரில் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் தர்ணா

டெல்லியில் இன்று காலை பாராளுமன்றம் கூடிய நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றம் எதிரில் நின்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள். பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததாகவும் இதற்காக டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு புகார் கூறினார்.

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்-மந்திரி சித்தராமையா டி.ஐ.ஜி. ரூபாவை பணியிடமாற்றம் செய்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடமாற்றத்துக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

டெல்லியில் இன்று காலை பாராளுமன்றம் கூடிய நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் பாராளுமன்றம் எதிரில் நின்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள். டி.ஐ.ஜி. ரூபாவுக்கு மீண்டும் சிறைத்துறையில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதில் எடியூரப்பா உள்பட அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். முன்னதாக எடியூரப்பா கூறுகையில், டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. விசாரணை முடிவடையாத நிலையில் இடமாற்றம் செய்வது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும். எனவே இதுபற்றி உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் முறையிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.

இதேபோல் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி சதானந்த கவுடாவும் டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிறையில் நடந்த முறைகேடுகளை மறைக்க ரூபா இடம் மாற்றம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply