முல்லைத்தீவு சிங்கள மகா வித்தியாலையத்தில் வெடிப்பு சம்பவம்: 8 மாணவர்கள் வைத்தியசாலையில்
முல்லைத்தீவு கோகிலாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலையத்தில் இன்று காலை சிறு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த 6 மாணவிகளும் இரு மாணவர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளனர்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளுக்கு தீ வைத்த சந்தர்ப்பத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் (gelignite gel ) ரக வெடிபொருள் வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
முல்லைத்தீவு பொலிஸார் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply